NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

பிரபல நடன கலைஞர் ரஜினி செல்வநாயகம் காலமானார்…!

இலங்கையின் சிரேஸ்ட நடன கலைஞர்களில் ஒருவராக கருதப்படும் கலாசூரி ரஜினி செல்வநாயகம் தனது 71 ஆம் வயதில் காலமானார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் குறித்த தகவல்கள் பின்னர் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ரஜினி செல்வநாயகம் பல்வேறு விருதுகளை வென்றவர் என்பதுடன் பல மாணவர்களை கலை உலகிற்கு அறிமுகம் செய்துள்ளார்.

இவரது நடன கல்லூரியின் மூலம் பெரும் எண்ணிக்கையிலான மாணவர்கள் வெளிச்சத்திற்கு கொண்டுவரப்பட்டனர்.

நீண்ட அனுபவம் மிக்க கலாசூரி, கலா கீர்த்தி ரஜினி செல்வநாயகம் இலங்கை கலைத்துறைக்கு அளப்பரிய சேவையை வழங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Share:

Related Articles