பிரான்ஸில் சந்தேகத்திற்குரிய பொருள் ஒன்றை பொலிஸார் கண்டுபிடித்துள்ள நிலையில், பாரிஸ் ஒலிம்பிக் போட்டிகள் நேற்று மாலை இடைநிறுத்தப்பட்டதாக, சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ஸ்டேட் டி பிரான்ஸ் மைதானத்தில் நேற்று இந்த மர்மப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, மைதானத்தின் ஒரு பகுதியை பொலிஸார் சுற்றிவளைத்து விசேட பரிசோதனைகளை மேற்கொண்டனர்.
முதல் ஒலிம்பிக் அமர்வு நேற்று மதியம் ஒரு மணிக்கு நிறைவடைந்திருந்த நிலையில், இரண்டாவது போட்டிகள் மாலை 6 மணி வரை தொடங்கவில்லை.
குறித்த மர்ம பொருள் கண்டெடுக்கப்பட்ட வேளையில் மைதானத்தில் பார்வையாளர்கள் எவரும் இருக்கவில்லை என உறுதி செய்யப்பட்டது.
இதனை தொடர்ந்து, பாரிஸ் நகரில் ஆயுதமேந்திய பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் குவிக்கப்பட்டு பாதுகாப்பு மேலும் பலப்படுத்தப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.