NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

பிரான்ஸ் ஜனாதிபதி இஸ்ரேலுக்கு விஜயம் !

பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் இன்று இஸ்ரேலுக்கு விஜயம் செய்துள்ளார்.

அவர் இன்று மாலை இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவை சந்திக்க உள்ளார். இஸ்ரேலுக்கு ஆதரவளிப்பதே இந்த விஜயத்தின் நோக்கம் என குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை, சீன வெளிவிவகார அமைச்சர் வாங் யீ எதிர்வரும் வியாழன் முதல் ஞாயிற்றுக்கிழமை வரை அமெரிக்காவிற்கு விஜயம் செய்யவுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

அங்கு அவர் அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் அந்தோனி பிளிங்கன் மற்றும் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜேக் சல்லிவன் ஆகியோரை சந்திக்க உள்ளார்.

ஹமாஸ்-இஸ்ரேல் விவகாரம் குறித்து விவாதிக்க உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

Share:

Related Articles