NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

பிரான்ஸ் வீரர் போக்பா விளையாட தடை !

டெஸ்டோஸ்டிரோன் என்ற தடை செய்யப்பட்ட ஊக்கமருந்தை பயன்படுத்தியிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதால் பிரான்ஸ் நாட்டை சேர்ந்த முன்னணி உதைபந்தாட்ட வீரரான பால் போக்பா விளையாடுவதற்குத் தடை விதிக்க்கப்பட்டுள்ளது.

கடந்த ஓகஸ்ட் மாதம் சீரிய ஏ தொடரில் ஜுவென்டஸ் அணிக்கு எதிரான போட்டியில் அவர் ஊக்கமருந்து பயன்படுத்தியிருப்பது தெரியவந்துள்ளது.

இந்த போட்டியில் அவர் அணியில் இடம்பிடித்திருந்தாலும், ஆட்டம் முழுவதும் பெஞ்சில் அமர வைக்கப்பட்டிருந்தார்.

இதன் பின்னர் மேற்கொண்ட பரிசோதனையில் அவர் ஊக்கமருந்து பயன்படுத்தி இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக தற்போது அவர் விளையாடி வரும் ஜூவ் அணிக்கு எதிரான போட்டியில் விளையாட தடை விதிக்கப்பட்டுள்ளார்.

போக்பாவுக்கு விதிக்கப்பட்டிருக்கும் தடைக்கு எதிர்ப்பு தெரிவிக்க அவருக்கு செப்டம்பர் 16ஆம் திகதி வரை கால அவகாசமும் வழங்கப்பட்டுள்ளது. 30 வயதாகும் போக்பா மீதான இந்த குற்றச்சாட்டு உறுதியானால், இரண்டு ஆண்டுகள் வரை அவர் கால்பந்து விளையாட தடை விதிகப்படலாம்.

2018ஆம் ஆண்டில் உலகக் கிண்ணத்தை வென்ற பிரான்ஸ் அணியில் முக்கிய வீரராக இருந்தவர் போக்பா என்பது குறிப்பிடத்தக்கது.

Share:

Related Articles