NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

பிரிட்டன் பொதுத்தேர்தலில் தமிழ்ப் பெண் வெற்றி!

பிரிட்டன் பொதுத்தேர்தலில் 8 தமிழர்கள் போட்டியிட்டிருந்த நிலையில் உமா குமரன் அதிக வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.

பிரிட்டன் தேர்தலில் அதிகளவில் இந்தியர்கள் போட்டியிட்டிருந்த நிலையில் தொழில் கட்சி சார்பில் போட்டியிட்ட உமா குமரன், ஸ்டராட்ஃபோர்ட் தொகுதியில் 19,145 வாக்குகளை பெற்று மாபெரும் வெற்றியை பதிவு செய்துள்ளார்.

அவரை எதிர்த்து போட்டியிட்ட கன்சர்வேட்டிவ் கட்சி வேட்பாளரான கேன் பிளாக்வெல், 3,144 வாக்குகள் மாத்திரம் பெற்று 4ஆவது இடத்தைப் பெற்றார்..

இலங்கை தமிழ்ப் பெண்ணான உமா குமரன் பிரித்தானிய வரலாற்றில் முதல் தமிழ் பாராளுமன்ற உறுப்பினர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார்.

இவரது குடும்பம் இலங்கையில் ஏற்பட்ட உள்நாட்டுப் போருக்கு பின்னர் இங்கிலாந்துக்கு குடிபெயர்ந்துள்ளனர்.

பிரிட்டனில் பிறந்து வளர்ந்த உமா குமரன், அங்கேயே படித்து அரசியலில் இளங்கலை பட்டம் பெற்றார். அதைத் தொடர்ந்து, செப்டம்பர் 2020-ல், கெய்ர் ஸ்டார்மரின் பாராளுமன்ற விவகாரங்களுக்கான துணை இயக்குநராக பணியாற்றினார். 

அதன் பின்னர் C40 Cities Climate Leadership Group இன் இணைத் தலைவர்கள் சார்பாக இராஜதந்திர மற்றும் சர்வதேச உறவுகளின் இயக்குனரானார்.

அவர் தொழிலாளர் காலநிலை மற்றும் சுற்றுச்சூழல் மன்றத்தின் ஆலோசனை உறுப்பினராகவும் இருக்கிறார். இந்த நிலையில், Centre-left Labour கட்சி சார்பில் ஸ்ட்ராட்ஃபோர்ட், போவில் பாராளுமன்ற உறுப்பினராக போட்டியிட்டார். எதிர்த்து போட்டியிட்ட ஜோ ஹட்சன் 7,511 வாக்குகளை பெற்ற நிலையில், உமா குமரன் மொத்தம் 19,145 வாக்குகளை பெற்று வெற்றிபெற்றிருக்கிறார்.

இந்த வெற்றி குறித்து அவர் தன் எக்ஸ் பக்கத்தில், “ஸ்ட்ராட்ஃபோர்ட் மற்றும் போவின் முதல் பாராளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டது எனது வாழ்க்கையின் பெருமை. என் மீதும், தொழில் கட்சி மீதும் நம்பிக்கை வைத்த அனைவருக்கும் நன்றி. நான் எப்போதும் உங்கள் குரலாகவும் உங்கள் பிரதிநிதியாகவும் இருப்பேன். நான் எப்போதும் உங்களை வீழ விட மாட்டேன்” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

இங்கிலாந்தின் 650 இடங்களில் பாதிக்கும் மேலான இடங்களின் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், Centre-left Labour கட்சி 400-க்கும் அதிகமான இடங்களை வென்று ஆட்சியை கைப்பற்றியிருக்கிறது. Centre-left Labour கட்சி தலைவர் கெய்ர் ஸ்டார்மர் புதிய பிரதமராக பதவி ஏற்க உள்ளமை குறிப்பிடத்தகக்கது.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles