NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

பிரேஸில் நாட்டில் கட்டடம் இடிந்து விழுந்ததில் 11 பேர் பலி!

(அமிர்தப்பிரியா சிவலிங்கம்)

பிரேஸில் நாட்டின் வடபகுதியில் உள்ள பெர்னாம்புகோ மாநிலத்தில் கடந்த சில தினங்களாக பலத்த மழை பெய்துவரும் நிலையில்இ ரெசிப் அருகே உள்ள ஜங்கா பகுதியில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பு திடீரென இடிந்து விழுந்ததில் 11 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில் மீட்புக்குழுவினர் விரைந்து வந்து மீட்பு பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இந்த விபத்தில் 11 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகி உள்ளது.

அத்துடன்இ காணாமல் போனவர்களை தேடும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

குறித்த கட்டடத்தில் நீதிமன்ற உத்தரவை மீறி பல குடும்பங்கள் சட்டவிரோதமாக அங்கு குடியிருந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

Share:

Related Articles