NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

பிறப்பு சான்றிதழ் அற்றவர்களுக்கு அடையாள அட்டைகள்!

பிறப்புச் சான்றிதழ்கள் இல்லாத காரணத்தால் தேசிய அடையாள அட்டைகளைப் பெற முடியாமல் இருக்கும் 40 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தேசிய அடையாள அட்டை வழங்கும் வேலைத்திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளதாக ஆட்பதிவு ஆணையாளர் நாயகம் பிரதீப் சபுதந்திரி தெரிவித்தார்.

வாக்காளர் பதிவேட்டில் பதிவு செய்யப்பட்ட கிராம உத்தியோகத்தர் பிரிவில் நிரந்தர வதிவிடத்துடன்இ பிறப்புச் சான்றிதழ் இல்லாத காரணத்தினால் தேசிய அடையாள அட்டை பெறாத 40 வயதுக்கு மேற்பட்ட இலங்கை பிரஜைகள் இதற்கு விண்ணப்பிக்கலாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இது குறித்த மேலதிக தகவல்களை பிரதேச செயலக அலுவலகங்களுடன் இணைக்கப்பட்டுள்ள ஆட்பதிவு திணைக்களத்தின் அபிவிருத்தி உத்தியோகத்தர்களிடம் பெற முடியும் எனக் கூறப்பட்டுள்ளது.

Share:

Related Articles