தெற்கு சீனக் கடலில் ஏற்பட்ட காற்றழுத்த தாழ்வுநிலையினால் ‘கெமி’ எனப் பெயரிடப்பட்ட புயல் வலுப்பெற்றது.
முதலில் அது கிழக்கு தாய்வானை நோக்கி நகர்ந்து தற்சமயம் பிலிப்பைன்ஸ் நாட்டின் அருகிலுள்ள கடலில் மையம் கொண்டுள்ளது.
இதன் காரணமாக அங்கு கனமழை பெய்ததோடு, இடி, மின்னலினால் முக்கிய நகரங்கள் பாதிக்கப்பட்டன.தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்கி, வீதிகளில் வெள்ள நீர் பெருக்கெடுத்து ஓடியது.மரங்கள், மின் கம்பங்கள் ஆகியவை வேரோடு சாய்ந்தன. இதன் காரணமாக கரையோரங்களிலிருந்து சுமார் ஆறு லட்சம் பேர் பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
அதுமட்டுமின்றி பள்ளிகள், கல்லூரிகள் ஆகியவை மூடப்பட்டு, போக்குவரத்து சேவைகளும் ரத்து செய்யப்பட்டன.
இந்நிலையில் பிலிப்பைன்ஸில் கன மழைக்கு சிக்கி 13 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.அதேநேரம் வெள்ளத்தில் சிக்குண்டவர்களை மீட்கும் பணியும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.