NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

பிளாஸ்டிக் – பொலித்தீன் பைகளுக்கு நுகர்வோரிடமிருந்து பணம் வசூலிக்கத் திட்டம்!

பல்பொருள் அங்காடிகளில் இருந்து வாங்கும் பொருட்களுக்கு பிளாஸ்டிக் மற்றும் பொலித்தீன் பைகளை வழங்குவதற்கு நுகர்வோரிடம் பணம் வசூலிக்கும் வகையில் சட்டம் இயற்றுவதற்கான திட்டங்களை சுற்றுச்சூழல் அமைச்சு தயாரித்துள்ளது.

பல்பொருள் அங்காடிகளில் இருந்து வாங்கப்படும் பொருட்களுக்கு வரம்பு இல்லாமல் பிளாஸ்டிக் பைகள் மற்றும் பொலித்தீன் பைகளை வெளியிடுவதால் சுற்றுச்சூழலுக்குப் பெரும் பாதிப்பு ஏற்படுவதாக சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

சுற்றாடல் அமைச்சின் முன்னோடித் திட்டமாக, சில நிறுவனங்களுடன் இணைந்து நடைமுறைப்படுத்தப்படும் நடமாடும் குப்பை சேகரிப்புத் திட்டத்தின் முதலாவது கண்காட்சி நேற்று (08) விக்கிரமசிங்கபுர விளையாட்டரங்கில் சுற்றுச்சூழல் அமைச்சின் செயலாளர் கலாநிதி அனில் ஜாசிங்க தலைமையில் இடம்பெற்றது.

நாட்டில் நாளாந்தம் சுமார் பத்தாயிரம் மெற்றிக் டொன் கழிவுகள் சேகரிக்கப்படுகின்ற போதிலும் அதில் நான்கு சதவீதமே மீள்சுழற்சி செய்யப்படுவதாக அவர் தெரிவித்தார்.

Share:

Related Articles