NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

புகையிரதம் வருவதை அறியாது புகைப்படம் எடுத்த தம்பதியினர் – உயிரை காப்பாற்ற 90 அடி பள்ளத்தில் பாய்ந்து படுகாயம்

ராஜஸ்தான் மாநிலம் பாலியில் உள்ள கோர்மகாட் பாலத்தில் நேற்றையதினம் புகைப்படம் எடுக்கும் போது, ​​எதிரே வந்த புகையிரத்திடமிருந்து உயிரை காப்பாற்ற 90 அடி ஆழமுள்ள பள்ளத்தாக்கில் குதித்த கணவன் மற்றும் மனைவி பலத்த காயம் அடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த சம்பவம் தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், இந்த சம்பவத்துடன் தொடர்புடைய காணொளியும் இரணயத்தில் வைரலாகியுள்ளது.

புகைப்டம் எடுக்க முயற்சித்த போது, புகையிரதம் வருவதைக் கவனித்த தம்பதியினர் பீதியில் பாலத்திலிருந்து கீழே உள்ள பள்ளத்தாக்கில் குதிக்க முடிவு செய்தனர்.

இதனால் இருவருக்கும் பலத்த காயம் ஏற்பட்டுள்ளதுடன், கணவரின் நிலை மிகவும் கவலைக்கிடமாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேரில் பார்த்தவர்கள், தம்பதியர் புகைப்படம் எடுப்பதில் மூழ்கியிருப்பதைக் கண்டதாகத் தெரிவித்தனர். புகையிரதம் ஏறக்குறைய அவர்களின் மிக அருகில் வரும் வரை அவர்களுக்குத் தெரியாது.

திடீரென உணர்ந்ததால், செய்வதறியாது பள்ளத்தாக்கில் குதித்து விட்டதாக அருகில் பார்த்துக் கொண்டிருந்தவர்கள் தெரிவிக்கின்றனர்.

அதனை தொடர்ந்து படுகாயம் அடைந்த தம்பதியினரை அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

கோர்மகாட் பாலம், அதன் அழகிய காட்சிகள் காரணமாக புகைப்படம் எடுப்பதற்கான பிரபலமான இடமாக உள்ளது.

இது போன்ற சம்பவங்கள் மீண்டும் நடக்காமல் இருக்க கடுமையான பாதுகாப்பு நடவடிக்கைகளை அமுல்படுத்த உள்ளூர் அதிகாரிகள் ஆலோசித்து வருகின்றனர்.

Share:

Related Articles