கொழும்பில் இருந்து பதுளை நோக்கி பயணித்த புகைரதத்தில் மோதி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
குறித்த சம்பவத்தில் தியத்தலாவ பகுதியைச் சேர்ந்த 26 வயதுடைய நபர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இந்த சம்பவம் இன்று அதிகாலை பெரகும்புர – அம்பெவெல புகைரத நிலையங்களுக்கு இடையில் இடம்பெற்றுள்ளதாக பட்டிபொல பொலிஸார் தெரிவித்துள்ளனர்
உயிரிழந்தவர் புகைரத நிலையத்தில் புகைரத கடவை பணியாளராக பணி புரிந்து வந்ததாகவும், புகைரதம் செல்லும் போது அவர் புகைரத தண்டவாளத்தில் படுத்து உறங்கியதும் பொலிஸாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதனையடுத்து உயிரிழந்தவரின் சடலம் அதே புகைரதத்தில் ஏற்றி அம்பெவெல நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.