NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

புகையிரத சாரதியின் சமயோசிதத்தால் உயிர்பிழைத்த வயோதிபர் – குவியும் பாராட்டுக்கள்!

(அமிர்தப்பிரியா சிவலிங்கம்)

புகையிரதம் செல்லும் போது தண்டவாளத்தில் உறங்கி கொண்டிருந்த வயோதிபர் ஒருவரை புகையிரத சாரதியின் சமயோசித செயற்பாட்டால் உயிர் தப்பிய சம்பவமொன்று பொலன்னறுவை – மன்னம்பிட்டியவில் பதிவாகியுள்ளது.

இந்த சம்பவம் நேற்றிரவு (06) இரவு 8.40 மணியளவில் மன்னம்பிட்டி காட்டுப் பகுதியில் வைத்து இடம்பெற்றுள்ளது.

கொழும்பு – கோட்டை புகையிரத நிலையத்திலிருந்து நேற்று பிற்பகல் 3 மணியளவில் மட்டக்களப்பு நோக்கி பயணித்த புகையிரதம் மன்னம்பிட்டிய காட்டுப் பகுதியில் சென்று கொண்டிருந்த போது, வயோதிபர் ஒருவர் எழும்ப முடியாமல் தண்டவாளத்தில்; தூங்கிக் கொண்டிருந்ததை அவதானித்த புகையிரத சாரதி சமயோசிதமாக புகையிரதத்தை நிறுத்தி வயோதிபரை காப்பாற்றியுள்ளார்.

மதுபோதையில் இரத்தக் காயங்களுடன் காணப்பட்ட சுமார் 75 வயது மதிக்கத்தக்க வயோதிபர் அந்த புகையிரதத்திலேயே ஏற்றப்பட்டு மன்னம்பிட்டி புகையிரத நிலைய அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டார்.

புகையிரத சாரதியின் இந்த செயற்பாட்டை பலரும் பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.

Share:

Related Articles