பல கோரிக்கைகளின் அடிப்படையில் கடந்த 09 ஆம் திகதி நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் நிலையில் புகையிரத நிலைய அதிபர்கள் மற்றும் கட்டுப்பாட்டாளர்களின் பணிப்பகிஷ்கரிப்பு காரணமாக, புகையிரத நிலையங்களில் பொலிஸார் பாதுகாப்பில் ஈடுப்பட்டுள்ளனர்.
இதற்கு ஒத்துழைப்பு வழங்கும் வகையில் இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகேவுக்கு பாதுகாப்பு அமைச்சினால் விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு இணங்க படையினர் இராணுவத் தளபதியினால் பாதுகாப்புப் படைத் தலைமையக தளபதிகள் பணிக்கப்பட்டுள்ளனர்.
அதன்படி, தற்போது, கண்டி, கட்டுகஸ்தோட்டை, மாத்தளை, பேராதெனிய, கம்பளை, நாவலப்பிட்டி, ஹட்டன், வட்டவளை, கொட்டகலை, தலவாக்கலை, நானுஓயா, அம்பேவெல, புத்தளம், சிலாபம், மாதம்பே, நாத்தாண்டிய, அலவ்வ, பொல்கஹவெல, குருநாகல், மஹவ ஆகிய ரயில் நிலையங்கள் உட்பட 45 புகையிரத நிலையங்களில் பாதுகாப்புப் படையினர் மேற்கு மற்றும் மத்திய பாதுகாப்புப் படைத் தலைமையக தளபதிகளின் கண்காணிப்பின் கீழ் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.