NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

புடினுக்கு நரம்பியல் நோயா ?

ரஷ்ய ஜனாதிபதியின் உடல்நிலை தொடர்பாக, அவ்வப்போது பல்வேறு தகவல்கள் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தி வருகின்றது.

‘நரம்பியல் நோயால் புடின் பாதிக்கப்பட்டுள்ளதால், அவரால் நீண்ட நேரம் நிற்க முடியாது.அவரது கால்களில் நடுக்கம் தென்படுகின்றது’ என சில மாதங்களுக்கு முன் தகவல் வெளியானது.

‘புடின் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளார். அவரால் வெளியில் நடமாட முடியவில்லை. அவரைப் போன்ற தோற்றத்தில் உள்ள நபர், பொது நிகழ்வுகளில் பங்கேற்கிறார்’ என தகவல்கள் வெளியாகின.

அவரது கைகளில் அதிகமாக ஊசி செலுத்தப்பட்ட தடங்கள் இருப்பதாகவும் கூறப்பட்டது.இந்நிலையில் நேற்று முன்தினம், ரஷ்ய ஜனாதிபதிக்கு கடுமையான உடல்நலக் குறைவு ஏற்பட்டுள்ளதாக சமூக வலைதளங்களில் தகவல் பரவியது.

அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு படுக்கையில் இருந்து விழுந்ததாகவும், மருத்துவமனையில் தீவிர சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் வதந்தி பரவியது.

இந்நிலையில், நேற்று இது குறித்து ரஷ்ய ஜனாதிபதி மாளிகையின் ஊடகப் பேச்சாளர் டிமிட்ரி பெஸ்கோவ் செய்தியாளர்களிடம் கருத்து தெரிவிக்கையில்,

‘ரஷ்ய ஜனாதிபதி நல்ல ஆரோக்கியத்துடன் உள்ளார். அவரது உடல்நலம் குறித்து வெளியான தகவல்கள் அனைத்தும் வதந்தி என தெரிவித்துள்ளார்.

மேலும் ‘அவரது உடல்நிலை குறித்து மேற்கத்திய நாடுகள் இதுபோன்ற வதந்திகளை உள்நோக்கத்துடன் பரப்பி வருகின்றன’என தெரிவித்துள்ளார்.

Share:

Related Articles