NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

புதிய அரசியலமைப்பில் சுகாதாரம், மனித அடிப்படை உரிமையாக பிரகடனம் – நளிந்த ஜயதிஸ்ஸ..!

புதிய அரசியலமைப்பு மக்களின் அடிப்படை மனித உரிமையாக சுகாதாரத்தை அணுகுவதற்கான உரிமையை பிரகடனப்படுத்தியுள்ளதாக சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

அத்தோடு, அந்த உரிமையை மீறும் பட்சத்தில் நீதிமன்றத்தை நாடுவதற்கு மக்களுக்கு இது உதவும் எனவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

அகில இலங்கை சிறுநீரக நோயாளர் சங்கத்தின் வருடாந்த சமூக பாதுகாப்பு நிகழ்வில் கலந்து கொண்ட போதே சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ இதனைத் தெரிவித்துள்ளார்.

இந்த நிகழ்வு கொழும்பு மகாவலி கேந்திர மண்டபத்தில் நடைபெற்றது.

இதேவேளை, நீண்ட வரலாற்றைக் கொண்ட இலங்கையின் சுகாதார சேவையானது மிக விரைவாக கட்டமைப்பு ரீதியான மாற்றமாக மாற்றப்பட வேண்டும் எனவும் சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles