NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

புதிய கடற்படைத் தளபதி காஞ்சனா பானகொட கடமைகளை பொறுப்பேற்றார் !

புதிய கடற்படைத் தளபதியாக நியமனம் பெற்ற வைஸ் அட்மிரல் காஞ்சனா பானகொட தமது கடமைகளை சற்றுமுன்னர் பொறுப்பேற்றார்.

கடற்படைத் தலைமையகத்தில் இன்று அவர்  கடமைகளை பொறுப்பேற்றார்.

இதேவேளை, இலங்கை இராணுவத்தின் 25ஆவது தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ சற்று முன்னர் இராணுவ தலைமையகத்தில் தமது கடமைகளை பொறுப்பேற்றார்.

 புதிய இராணுவத் தளபதியாக மேஜர் ஜெனரல் லசந்த ரொட்ரிகோவும் புதிய கடற்படைத் தளபதியாக ரியர் அட்மிரல் காஞ்சன பானகொடவும் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவினால் நேற்று நியமிக்கப்பட்டிருந்தனர்.

இது தொடர்பான நியமனக் கடிதங்கள் நேற்று (30) ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவினால் ஜனாதிபதி அலுவலகத்தில் வைத்து கையளிக்கப்பட்டன.

இராணுவத் தளபதி ஜெனரல் விக்கும் லியனகே மற்றும் கடற்படைத் தளபதி அட்மிரல் பிரியந்த பெரேரா ஆகியோர் இன்று தமது பதவிகளில் இருந்து ஓய்வு பெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles