NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

புதிய கின்னஸ் சாதனைக்குத் தயாராகிவரும் பொகவந்தலாவை இரட்டையர்கள்!

(அமிர்தப்பிரியா சிவலிங்கம்)

பொகவந்தலாவையில் வசிக்கும் இரட்டை சகோதரர்கள் புதிய கின்னஸ் சாதனை ஒன்றை படைக்கவுள்ளனர்.

யாழ்ப்பாணம் – கோட்டையிலிருந்து காலி கோட்டை வரை 566 கிலோமீற்றர் தூரத்தை நடந்து கடக்கவுள்ளனர்.

இன்று அதிகாலை 4 மணியளவில் நடைபயணத்தை ஆரம்பித்த அவர்கள் நாளை மறுநாள் (16) இலக்கை அடைய உள்ளனர். பொகவந்தலாவையில் வசிக்கும் 32 வயதுடைய இரட்டை சகோதரர்களான ரொபர்ட் அந்தோனி தயாபரன் மற்றும் ரொபர்ட் அந்தோனி விக்னேஸ்வரன் ஆகியோர் புதிய கின்னஸ் சாதனையை படைக்க தயாராக உள்ளனர்.

இந்த இரட்டை சகோதரர்கள் இதற்கு முன் பல கின்னஸ் சாதனைகளை படைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share:

Related Articles