NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

புதிய சீறுடையுடன் களமிறங்கும் டெல்லி அணி!

கடந்த மார்ச் மாதம் ஆரம்பித்த 16வது ஐபிஎல் தொடரின் இறுதி கட்ட லீக் ஆட்டங்கள் தற்போது நடைபெற்று வருகின்றன.


இதுவரை 65 லீக் போட்டிகள் நிறைவடைந்துள்ள நிலையில் குஜராத் டைட்டன்ஸ் முதல் அணியாக பிளேஆப் சுற்றுக்கு முன்னேறி உள்ளதுடன் டெல்லி கேப்பிடல்ஸ மற்றும் சன் ரைசர்ஸ் ஹைதரபாத் அணிகள் தொடரில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளன.


ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோத உள்ளன.
இந்நிலையில் சென்னை அணிக்கு எதிரான நாளை நடைபெறவுள்ள போட்டியில் டெல்லி கேப்பிடல்ஸ் அணி புதிய சீருடை அணிந்து போட்டியிடவுள்ளதாக டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் நிர்வாகம் தெரிவித்துள்ளது.


இந்த தொடரில் இதற்கு முன்னதாக மும்பை, பெங்களூரு, குஜராத் அணிகள் மாற்று சீருடையுடன் விளையாடி உள்ளன.
லக்னோ அணி தனது கடைசி லீக் ஆட்டத்தில் புதிய சீருடையுடன் களம் இறங்க உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Share:

Related Articles