NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

புதிய வர்த்தமானி காரணமாக முட்டையை அதிக விலைக்கு கொள்வனவு செய்ய வேண்டிய நிர்ப்பந்தம்!

நுகர்வோர் அதிகார சபையினால் வெளியிடப்பட்டுள்ள புதிய வர்த்தமானியின் காரணமாக நுகர்வோர் முட்டையொன்றை 50 ரூபாவிற்கும் அதிகமான விலைக்கு கொள்வனவு செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக, அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர் சங்கத்தின் தலைவர் சரத் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

குளியாப்பிட்டியவில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

Share:

Related Articles