புத்தளம் நகரில் அனுமதியற்ற போதைப்பொருள் விற்பனை நிலையமொன்றை சுற்றிவளைத்து 10 இலட்சம் ரூபாவிற்கும் அதிகமான பெறுமதியான போதைப் பொருட்களை கைப்பற்றியதாக தேசிய போதைப்பொருள் ஒழுங்குமுறை அதிகார சபையின் சட்ட அமுலாக்கல் பிரிவின் தலைவர் அமித் பெரேரா தெரிவித்தார்.
தேசிய போதைப்பொருள் ஒழுங்குமுறை அதிகாரசபை மற்றும் புத்தளம் மாவட்ட உணவு மற்றும் மருந்துப் பரிசோதகர்கள் ஆகியோருக்கு கிடைத்த முறைப்பாடுகளின் அடிப்படையில் இந்தச் சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டதுடன், பொலிஸ் விசேட அதிரடிப்படையினரின் பாதுகாப்பும் வழங்கப்பட்டிருந்தது.
புத்தளம் மாவட்ட உணவு மற்றும் மருந்துப் பரிசோதகர்கள் கடுமையான எச்சரிக்கைகளை விடுத்து, அந்த இடத்தில் இருந்து போதைப் பொருட்களை அகற்றுமாறு முன்னரே அறிவித்திருந்த போதிலும் தொடர்ந்தும் செயற்பட்டதாகக் கூறப்படுகிறது.
சோதனையின் போது போதைப்பொருள் விற்பனை இடம்பெற்றதாகவும், விற்பனைக்கு இருந்த 10 இலட்சத்திற்கும் அதிகமான பல்வேறு வகையான போதைப்பொருட்கள் அனைத்தும் புத்தளம் மருந்து ஒழுங்குமுறை அதிகார சபைக்கு கொண்டு வரப்பட்டு அந்த இடம் சீல் வைக்கப்பட்டதாகவும் மருந்து கட்டுப்பாட்டு அதிகாரசபை தெரிவித்துள்ளது.