NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

புத்தளம் – உடப்பு பகுதியில் விசமிகளின் அட்டகாசம்: ரூ.2 கோடி பெறுமதியான சொத்துக்கள் அழிப்பு!

புத்தளம் – உடப்பு பொலிஸ் பிரிவிற்குபட்ட ஆண்டிமுனைப் பகுதியில் இன்று (19) அதிகாலை இனந்தெரியாத விசமிகளினால் படகு, இயந்திரம், 3 வள்ளங்கள் மற்றும் 4 வலைகளுக்குத் தீ வைக்கப்பட்டுள்ளது.

இவை முற்றாக தீக்கிரையுள்ளதாகவும் அப்பகுதி மீனவர்கள் தெரிவிக்கின்றனர்.

இவ்வாறு தீயிட்டு கொழுத்தப்பட்ட உடமைகள் அனைத்தும் சுமார் 2 கோடி 15 இலட்சம் ரூபா பெருமதியென மதிப்பிடப்பட்டுள்ளது.

இவ்வாறான சம்பவம் உடப்பு – ஆண்டிமுனைப் பகுதியில் இடம்பெற்றதில்லையெனவும் இதுவே முதல் தடவையெனவும் அப்பகுதி மீனவர்கள் தெரிவிக்கின்றனர்.

குறித்த சம்பவம் தொடர்பில் உடப்பு பொலிஸார் மேலதிக விசாரணைகளை விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles