NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

புத்தாண்டில் நாடு முழுவதும் விசேட போக்குவரத்து சேவை!

புத்தாண்டை முன்னிட்டு கிராமங்களுக்கு செல்லும் மக்களுக்காக விசேட தொலைதூர போக்குவரத்து சேவைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து அதிகாரிகள் இன்று தெரிவித்துள்ளனர்.

பண்டிகை காலத்தை முன்னிட்டு இலங்கை போக்குவரத்து சபை 1,400 பேருந்துகளை சேவையில் ஈடுபடுத்தவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், பண்டிகை காலத்தை முன்னிட்டு கிராமங்களுக்கு செல்லும் பொதுமக்களுக்காக 12 சிறப்பு புகையிரத இயக்க புகையிரத துறை திட்டமிட்டுள்ளது.

இலங்கை புகையிரத திணைக்களத்தின் பிரதி பொது முகாமையாளர் நந்தன இண்டிபோலகே ஏப்ரல் 10 ஆம் திகதி முதல் பதுளைக்கு இரண்டு விசேட புகையிரதங்கள் சேர்க்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

இதேவேளை, பெலியத்தவில் இருந்து மருதானை வரையிலும், காலியில் இருந்து கொழும்பு கோட்டை வரையிலும் 4 விசேட புகையிரதங்கள் சேர்க்கப்பட்டுள்ளதாகவும், ஏப்ரல் 14 மற்றும் 15 ஆம் திகதிகளில் வெளி மாகாணங்களில் இருந்து கொழும்புக்கு மேலதிக புகையிரதங்கள் சேர்க்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

ஏப்ரல் 13ஆம் திகதிக்கு பின்னர் கொழும்புக்கு வரும் மக்களின் தேவைக்கு ஏற்ப பேரூந்துகளை சேவையில் ஈடுபடுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபையின் பிரதி பொது முகாமையாளர் பண்டுக ஸ்வர்ணஹன்ச தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles