புத்தாண்டின் போது மேற்கொள்ளப்படும் செயற்பாடுகளினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைப்பதற்காக மக்கள் கவனமாக இருக்க வேண்டுமென கண் மருத்துவ நிபுணர்கள் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
சிறுபிள்ளைகளை பட்டாசு வெடிக்க அனுமதிக்க வேண்டாம் என அதன் தலைவர் கண் சத்திரசிகிச்சை நிபுணர் வைத்தியர் கபில பந்துதிலக பெரியவர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
மேலும், பட்டாசு விபத்துகளில் 46 சதவீதம் கை, விரல்களுக்கும், 17 சதவீதம் முகத்துக்கும், மேலும் 17 சதவீதம் கண்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்துவதைக் காண முடிகிறது என அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.