NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

புத்தாண்டு காலத்தில் வீதி விபத்துக்களால் 14 மரணங்கள் பதிவு!

புத்தாண்டு காலத்தை உள்ளடக்கிய ஏப்ரல் 13, 14 மற்றும் 15 ஆம் திகதிகளில் வீதி விபத்துக்களால் 14 மரணங்கள் பதிவாகியுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

குறித்த காலப்பகுதியில் பெருமளவானோர் காயமடைந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.

வாகன சாரதிகளை அவதானமாக செயற்படுமாறும், மது அருந்திவிட்டு வாகனம் செலுத்த வேண்டாம் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

Share:

Related Articles