JCB நிறுவனம் JCB Toughphone மற்றும் JCB Toughphone Max எனும் இரு தயாரிப்புகளை அறிமுகம் செய்துள்ளது.
உலக அளவில் கனரக உபகரணங்கள் தயாரிப்பில், முன்னணி நிறுவனமாக திகழும் JCB நிறுவனம், பொக்லைன், புல்டோசர்கள், மற்றும் கட்டுமான தொழிநுட்பத்திற்கு தேவையான டிரக்குகள் என ஏராளமான தயாரிப்புகளை வழங்கி வருகிறது. இந்நிலையில், JCB நிறுவனம் புயலே அடித்தாலும் தாங்கங்கூடிய வகையில் முரட்டுத்தனாமான JCB Toughphone மற்றும் JCB Toughphone Max என்ற இரு ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்துள்ளது.
இந்த ஸ்மார்ட்போன்கள் முற்றிலும் ரக்கட்டான லுக்கில், ராணுவ வீரர்கள் பயன்படுத்தும் உபகரணங்கள் எவ்வளவு தரமாக இருக்குமோ அந்த தரத்தில் உருவாக்கப்பட்டுள்ளன. அதாவது, மழை, வெயில், குளிர் என்று அனைத்தையும் எளிதாக தாங்ககூடிய உபகரணங்களுக்கு வழங்கப்படும் MIL-SPEC 810G தர சான்றிதழ் பெற்றுள்ளது.
இதன் பாடி அமைப்பு, பாலிகார்பனேட் மற்றும் மெட்டல் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. இதனால் தண்ணீரில் மூழ்கினாலும், பாறையில் விழுந்தாலும், பாதுகாப்பாக இருக்கும்.
சிறப்பம்சங்கள் பொறுத்தவரை, ஜேசிபி டஃப்போனில் 5.7 இன்ச் எச்டிபிளஸ் (HD+) ஐபிஎஸ் (IPS) எல்சிடி (LCD) டிஸ்பிளே கொரில்லா கிளாஸ் புரெக்டெக்ஷன் (Gorilla Glass) கொடுக்கப்பட்டுள்ளது. அதேபோல், ஆண்ட்ராய்டு 13 ஓஎஸ் உடன் மீடியாடெக் ஹீலியோ பி22 (MediaTek Helio P22) சிப்செட் அடிப்படையில் இயங்குகிறது. மேலும், இதில், 6 ஜிபி ரேம் + 128 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் மற்றும் 4,050mAh பேட்டரி வழங்கப்பட்டுள்ளது.
சர்வதேச மார்கெட்டில், ஜூலையில் விற்பனைக்கு வரும் என்று கூறப்படுகிறது.