NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

புற்று நோயினால் பாதிக்கப்பட்ட மனைவியை உடலுறவுக்காக சித்திரைவதை செய்த கணவர் தொடர்பில் விசாரணை!

(அமிர்தப்பிரியா சிவலிங்கம்)

புற்று நோயினால் பாதிக்கப்பட்ட மனைவியை உடலுறவுக்காக சித்திரவதை செய்ததாக கூறப்படும் 67 வயதுடைய கணவன் தொடர்பில் வெலிபென்ன பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதியப்பட்டுள்ளது.

அண்மையில் வெலிப்பன்ன பொலிஸ் நிலையத்துக்குச் சென்ற 54 வயதுடைய பெண் ஒருவர் தனது 67 வயது கணவருக்கு எதிராக முறைப்பாடு ஒன்றை பதிவு செய்துள்ளார்.

தனக்கு 14 வயதாக இருக்கும்போது விருப்பமில்லாமல் தனது கணவரை திருமணம் செய்ததாகவும் திருமணமாகி 40 வருடங்களாகுவதாகவும் தெரிவித்த அவர், தனக்கும் தனது கணவருக்கும் 3 மகன்கள் இருக்கும் நிலையில், மூத்த மகனுக்கு சுமார் 40 வயது என்றும் அவர் பொலிஸில் செய்த முறைப்பாட்டில் குறிப்பிட்டுள்ளார்.

தான் அண்மையில் செய்த அந்தரங்கப் பகுதியில் ஏற்பட்ட புற்று நோய் காரணமாக சத்திர சிக்ச்சை செய்ததாகவும், அறுவைச் சிகிச்சையால் மிகவும் அசௌகரியமான நிலையில் இருப்பதாகவும், ஆனால் கணவர் தன்னைத் துன்புறுத்தி உடலுறவில் ஈடுபட வற்புறுத்துவதாகவும் இதுபற்றி பிள்ளைகளிடம் கூற முடியாதமையால் பொலிஸாரிடம் உதவி கேட்டதாக அவர் முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார்.

Share:

Related Articles