பூமியின் மிகக் குறைந்த ஈர்ப்பு விசை இலங்கையின் தெற்கு முனையில் காணப்படுவதாக நாசா அறிவித்துள்ளது.
ஒருவர் துருக்கியில் எடை கூடும் நபராகவும் அதேசமயம், இலங்கையில் எடை குறைந்து இலகுவாக இருப்பதற்கான காரணம் இதுவே என விஞ்ஞானிகள் சமீபத்தில் கண்டுபிடித்துள்ளனர்.
1960 களில் இருந்து, புவியீர்ப்பு பூமியை சமமாக பாதிக்காது என்பதை நாசா அறிந்திருக்கிறது. ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு பயணிக்கும் பொருட்களின் எடையில் ‘மாற்றங்கள்’ நிகழ்வதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த கிரகத்தின் மிகக் குறைந்த ஈர்ப்பு விசை இலங்கையின் தெற்கு முனையிலும் மாலைத்தீவுக்கு கிழக்கே இந்தியப் பெருங்கடலின் சில பகுதிகளிலும் காணப்படுகிறது.
ஹட்சன் விரிகுடா பகுதியைச் சுற்றியுள்ள வட கனடாவும் குறைந்த ஈர்ப்பு விசை உள்ள பகுதியாகும். பூமியின் மேலோட்டத்தின் தடிமன் மற்றும் மேற்பரப்பிற்கு அடியில் உள்ள உருகிய பாறை மற்றும் மாக்மாவின் அளவு ஆகியவற்றில் வேறுபாடுகளால் இவை நிகழலாம் என்று நாசா வெளியிட்டுள்ள தகவலில் மேலும் குறிப்பிட்டுள்ளது.