அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆய்வு மையமானது, பூமியின் மீது மோதக்கூடிய குறுங்கோள் பற்றிய ஆய்வை ஏப்ரல் மாதம் மேற்கொண்டது.
இந்த ஆய்வு முடிவு கடந்த 20ஆம் திகதி வௌியிடப்பட்ட நிலையில், சக்தி வாய்ந்த குறுங்கோள் ஒன்று பூமியை 72 சதவீதம் தாக்கக்கூடிய சாத்தியக்கூறு இருப்பதாக அதிர்ச்சியான தகவல் தெரிய வந்துள்ளது.
இந்த குறுங்கோளானது, இயற்கை பேரிடரில் ஒன்றாக காணப்படுகிறது.
ஆனால், இதனை முன்பே கண்டறிந்து அதனை தடுக்கும் நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.
அதன்படி, 2038ஆம் வருடம் ஜூலை 12ஆம் திகதி குறித்த குறுங்கோளானது பூமியின் மீது மோதுவதற்கு 72 சதவீதம் வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
இந்த குறுங்கோள் எவ்வளது பெரியது? அதில் என்னென்ன பொருட்கள் கலந்துள்ளன போன்றவற்றை சரியாக தீர்மானிக்க முடியவில்லை எனவும் இந்த குறுங்கோள் மோதலை தடுப்பதற்கு போதிய அளவில் நாம் தயாராக இல்லை என்றும் நாசா தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.