NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

பூமியை நோக்கி வரும் 298 அடி அகல விண்கல் !

298 அடி அகலம் கொண்ட இராட்சத விண்கல் இன்று பூமியை கடந்து செல்லவுள்ளது. 2013 டபிள்யூ-வி.44 என்று பெயரிடப்பட்ட இந்த இராட்சத விண்கல்லை அமெரிக்காவின் விண்வெளி கழகமான நாசா தொடர்ந்து கண்காணித்து வருகிறது.

இந்த விண்கல்லை நாசா 2013ம் ஆண்டு கண்டு பிடித்தது. இது ஒலியின் வேகத்தை விட 34 மடங்கு வேகத்தில் வினாடிக்கு 11.8 கி.மீ வேகத்தில் பயணிப்பதாக விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.

இந்த இராட்சத விண்கல் இன்று பிற்பகலில் பூமிக்கு மிக அருகில் வந்து கடந்து செல்லும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பூமியில் இருந்து 33 லட்சம் கிலோ மீட்டர் தொலைவிற்குள் விண்கல் கடந்து செல்கிறது.

இராட்சத விண்கல் கடந்து பூமிக்கு எந்த பாதிப்பும் இருக்காது என்று கூறப்படுகிறது. சமீபத்தில் பூமிக்கு மிக அருகில் 2023 ஜெஎல்1 என்ற விண்கல் கடந்து செல்லும் என்று நாசா எச்சரிக்கை விடுத்துள்ளது.

இது பூமியில் இருந்து 24.90 லட்சம் கிலோ மீட்டர் தொலைவில் கடந்து செல்லும் என்றும் இது மணிக்கு 26 ஆயிரத்து 316 கிலோ மீட்டர் வேகத்தில் பயணிக்கும் என்றும் தெரிவித்தனர்.

Share:

Related Articles