சந்தேகத்திக்கிடமான முறையில் உயிரிழந்த பெண் ஒருவரின் சடலத்துக் குரியது என்று சந்தேகிக்கப்படும் , தலையொன்று சிதைந்த நிலையில் பயணப்பையிலிருந்து கண்டெடுக்கப்பட்டுள்ளது.
அதேபோன்று குறித்த பெண்ணின் இடது கையும் அதற்கு அருகிலிருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
சடலத்தின் இந்த உடல் பாகங்கள் நேற்று (16) கண்டுபிடிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனா்.
ரெக்வூட் தோட்டம், ஹேவாஹெட பிரதேசத்தைச் சேர்ந்த 76 வயதுடைய பெண்ணொருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார் என்பதும் விசாரணைகளில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
ஹங்குரன்கெத்த பொலிஸ் பிரிவுக்குடட்பட்ட ரெக்வூட் தோட்டத்தை சேர்ந்த பெண்ணொருவர் கடந்த 02 ஆம் திகதி வீட்டிலிருந்து புறப்பட்டுச் சென்று மீண்டும் வீட்டுக்கு திரும்பாத நிலையில், கடந்த 06 ஆம் திகதி குறித்த பெண்ணின் மகன் ஹங்குரன்கெத்த பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.
அதன் பின்னர், காணாமல்போன பெண்ணின் மகன் தனது தாயை பிரதேச மக்களுடன் இணைந்து தேடிப்பார்த்தபோது கடந்த 09 ஆம் திகதி மத்துரட்ட பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஒகந்தகல மலையின் அடிவாரத்தில் காணமல்போன பெண்ணின் தலை மற்றும் இடது கை இல்லாமல் சிதைவடைந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இது தொடர்பில் மத்துரட்ட பொலிஸாருக்கு அறிவித்ததுக்கமைய அந்த சடலம் தொடர்பில் திடீர் மரண பரிசோதனை மேற்கொண்டு சடலத்தை நுவரெலியா வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்ததன் பின்னர், சட்ட வைத்திய அதிகாரியினால் முன்னெடுக்கப்பட்ட பரிசோதனையில் இதுவொரு கொலைச் சம்பவம் என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
அதற்கமய, பொலிஸாரினால் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளுக்கமைய, நேற்று (16) குறித்த பெண்ணின் தலை பகுதி சிதைவடைந்த நிலையிலும் , இடது கைபகுதியும் இவ்வாறு கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளதுடன் அதனை நுவரெலியா வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது .
இந்த சம்பவம் தொடர்பில் மத்துரட்ட மற்றும் ஹங்குரன்கெத்த பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனா்.