மூன்றாவது முறையாகவும் பெண் குழந்தையைப் பிரசவித்த கோபத்தில் தனது மனைவியை உயிருடன் தீ வைத்து எரித்த சம்பவம் இந்தியாவின் மகாராஷ்டிரா மாநிலத்தில் பதிவாகியுள்ளது.
திருமணமான இத்தம்பதிக்கு ஆண் குழந்தை இல்லாமையினால் கணவன் மனைவியை தொடர்ந்தும் சித்திரவதைக்குட்படுத்தி வந்துள்ளார்.
இந்நிலையில் மீண்டும் கர்ப்பமான மனைவிக்கு 3ஆவது முறையாகவும் பெண் குழந்தையே பிறந்துள்ளது. இதனால் குறித்த கணவன் மனைவியுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டு மனைவியை உயிருடன் தீ வைத்து எரித்துள்ளார்.
தீக்காயங்களுக்கு உள்ளான குறித்த பெண் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
இச்சம்பவம் தொடர்பில் உயிரிழந்த பெண்ணின் கணவரை பொலிஸாரால்கைது செய்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.