பெண் பொலிஸ் உத்தியோகத்தர்கள் தங்கியிருக்கும் அறைக்குள் அதிகாலையில் பிரவேசித்ததாக கூறப்படும் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் நுரைச்சோலை பொலிஸ் நிலைய கட்டளைத் தளபதியினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபர் அண்மையில பொலிஸில் இணைந்து கொண்ட பயிலுனர் பொலிஸ் கான்ஸ்டபிள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேற்றைய தினம் (2ஆம் திகதி) நுரைச்சோலை பெண் பொலிஸ் உத்தியோகத்தர்கள் தங்கியிருந்த இடத்திற்குள் ஒருவர் நுழைந்துள்ளதாக நிலையத் தளபதிக்கு தகவல் கிடைத்த நிலையில், அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட பொலிஸ் கான்ஸ்டபிள் தொடர்பில் கல்பிட்டி உதவி பொலிஸ் அத்தியட்சகருக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது.