NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு 1700 ரூபாவை வழங்குவதாக நான் உறுதிமொழி வழங்கவில்லை..!

பெருந்தோட்ட மக்களுக்கு 1,700 ரூபா சம்பளத்தை வழங்க முடியாத கம்பனிகளிடமிருந்து நிலத்தை பெற்று சம்பளத்தை வழங்கக் கூடிய கம்பனிகளுக்கு அதனை வழங்குவதே இதற்கு என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

கொழும்பில் ஊடக பிரதானிகளுடன் இன்று இடம்பெற்ற சந்திப்பின் போதே ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு 1700 ரூபாவை வழங்குவதாக நான் உறுதிமொழி வழங்கவில்லை. தொழில் அமைச்சின் திணைக்களம் குறித்த தொகையை ஒதுக்கியது. அதற்கு எதிராக சில கம்பனிகள் நீதிமன்றம் சென்றன.

தற்போது குறித்த கம்பனிகள் அமைச்சருடன் கலந்துரையாடி வருகின்றன. அத்தோடு, பழமையான பெருந்தோட்டத்துறை குறித்து என்னிடம் எவரும் கூற வேண்டாம். அதனை நான் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளமாட்டேன்.

சில கம்பனிகளுக்கு சம்பளத்தை வழங்க முடியும் என்றால், வழங்க முடியாத கம்பனிகளிடமிருந்து நிலத்தை பெற்று சம்பளத்தை வழங்கக் கூடிய கம்பனிகளுக்கு அதனை வழங்குவதே இதற்கு தீர்வு.

பெருந்தோட்ட மக்களுக்கு உரிய சம்பளத்தை வழங்க வேண்டும். அவர்கள் மிகவும் கஷ்டத்தில் வாழ்கின்றனர். அந்த மக்கள் வாழும் லயன் அறைகள் உள்ள பகுதிகளை கம்பனிகளுக்கு குத்தகைக்கு வழங்கியுள்ளோம். அந்த குத்தகையை ரத்துசெய்துவிட்து குறித்த பகுதிகளை கிராமங்களாக அறிவிக்க நடவடிக்கை எடுத்துள்ளோம் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மேலும் தெரிவித்துள்ளார்.

Share:

Related Articles