NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

பெருந்தோட்ட நாளாந்த குறைந்தபட்ச சம்பளமாக 1,350 ரூபாவை அறிவித்து வர்த்தமானி வெளியீடு..!

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த குறைந்தபட்ச வேதனமாக 1,350 ரூபாவை அறிவித்து வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

கடந்த 10ஆம் திகதி முதல் அமுலாகும் வகையில் தொழில் அமைச்சின் செயலாளர் ஆர்.பீ.ஏ.விமலவீரவினால் இந்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

மேலும், மேலதிக தேயிலை கிலோகிராம் ஒன்றுக்கு 50 ரூபாய் வழங்கப்பட வேண்டும் எனவும் அந்த வர்த்தமானியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன் கடந்த 10ஆம் திகதி முதல் எதிர்வரும் 3 வருடங்களுக்கு இந்த தீர்மானம் அமுலில் இருக்குமென வேதன நிர்ணய சபையில் தீர்மானிக்கப்பட்டதாகக் குறித்த வர்த்தமானி அறிவித்தலில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

Share:

Related Articles