NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

பெருமளவான மக்கள் ஜனாதிபதி ரணிலுக்கு ஆதரவளிக்கவே முன்வந்துள்ளனர் – பிரதமர்

மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க ஆட்சிக்கு வந்தால் நாட்டில் மீண்டும் இரத்த ஆறுதான் ஓடும் என பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.

கெஸ்பேவ நகரில் ரணிலால் முடியும் வெற்றிப் பேரணியில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே பிரதமர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று நாட்டின் பல பகுதிகளுக்கும் சென்று மக்களின் ஆதரவைக் கோரியுள்ளார். மக்களும் பெருமளவில் ஜனாதிபதிக்கு ஆதரவளிக்க முன்வந்திருக்கின்றார்கள்.

பாராளுமன்றத்தில் அனைத்து பகுதிகளையும் சேர்ந்த மக்கள் பிரதிநிதிகளினதும், பொதுமக்களினதும் நம்பிக்கையை ஜனாதிபதி உறுதி செய்திருக்கின்றார்.

இதுவரையில் பெண்களை வலுவூட்டுவதற்கான சட்டத்தை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மாத்திரமே முன்மொழிந்திருக்கின்றார். தவறியேனும், இந்த நாட்டில் மக்கள் விடுதலை முன்னணி ஆட்சிக்கு வந்தால் 3 எம்.பிக்களை வைத்துக்கொண்டு ஜனநாயக ஆட்சி செய்யும் இயலுமை அநுரகுமார திஸாநாயக்கவுக்கு இல்லை.

எனவே, அவர் தன்னிச்சையான அதிகாரங்களுடன் செயற்பட முயற்சிப்பார். ஆகவே, நாட்டில் ஆட்சி அதிகாரத்தைச் செயற்படுத்தக்கூடிய பாராளுமன்ற அதிகாரம் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடமே உள்ளது.

இம்முறை பெருமளவான புதிய வாக்காளர்கள் பதிவாகியிருக்கும் நிலையில் நாட்டின் எதிர்காலத்தைச் சிந்தித்து வாக்களிக்க வேண்டும் என வலியுறுத்தினார்.

Share:

Related Articles