விவசாயத் திணைக்களம் மற்றும் விவசாய அமைச்சு ஆகியன ஒன்றிணைந்து பெரும்போகத்திற்காக விசேட விதை நெல் வேலைத்திட்டமொன்றை ஆரம்பித்துள்ளன.
உத்தரவாத விதை நெல்லை விவசாயிகளுக்கு வழங்குவதனால் தரமான மற்றும் வெற்றிகரமான அறுவடையைப் பெற்றுக்கொள்வதற்கு இத்திட்டத்தின் ஊடாக எதிர்பார்க்கப்படுகின்றது.
விவசாயத் திணைக்களத்தின் பதலைகொடை நெல் ஆராய்ச்சி நிறுவனத்தின் ஊடாக இத்திட்டம் செயற்படுத்தப்படுகின்றது.