பெட்றோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் மற்றும் எரிபொருள் விநியோகஸ்தர்களுக்கிடையில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளது.
இலங்கை பெட்றோலியக்கூட்டுத்தாபனத்தின் தலைவர் மற்றும் எரிபொருள் விநியோகஸ்தர் சங்கத்தினருக்கிடையில் நாளை இந்தக் கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, நாட்டில் சீரான முறையில் எரிபொருள் விநியோகம் முன்னெடுக்கப்பட்டுவருவதாக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் னு.து ராஜகருணா தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, எரிபொருள் விநியோகஸ்த்தர்களுக்கு வழங்கப்படும் 3 சதவீத கழிவை இரத்து செய்யும் தீர்மானத்தில் எந்தவொரு மாற்றமும் இல்லை என அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ குறிப்பிட்டுள்ளார்.