(அமிர்தப்பிரியா சிவலிங்கம்)
இரத்மலானை பகுதியில் உள்ள பேக்கரி ஒன்றில் கூரிய ஆயுதத்தால் தாக்கி நபர் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.
32 வயதான பேக்கரி உரிமையாளர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இருவருக்குமிடையில் ஏற்பட்ட வாக்குவாதம் எல்லை மீறியதை அடுத்து இந்த கத்திக்குத்து சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸாரின் முதற்கட்ட விசாரணையில் இருந்து தெரியவந்துள்ளது.
வாள்வெட்டுக்கு இலக்கான பேக்கரி உரிமையாளர் களுபோவில போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் போது உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேகநபர் தப்பிச் சென்றுள்ளதுடன், சந்தேகநபரை கைது செய்வதற்கான விசாரணைகளை பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.