NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

பேக்கரி உணவு பொருட்களின் விலை தொடர்பில் வெளியான அறிவிப்பு!

மின்சார கட்டணமும் அதிகரிக்கப்படும் நிலையில், பேக்கரி உணவுப் பொருட்களின் விலைகளை அதிகரிக்க வாய்ப்புள்ளதாக பேக்கரி உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைவர் கமல் பெரேரா தெரிவித்துள்ளார்.

காலியில் நேற்று (02) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

எரிபொருள் விலையேற்றத்தினால் தமது துறை பாரிய பாதிப்புக்களை எதிர்நோக்கியுள்ளதாக தெரிவித்தார்.

மின்சாரம் கட்டணத்தை அதிகரிக்கும் முயற்சி தற்போது இடம்பெற்று வருவதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Share:

Related Articles