NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

பேருந்து மீது கல் வீச்சு- ஏழு பேர் கைது

இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து மீது கல் வீச்சுத் தாக்குதல் மேற்கொண்டதாக சந்தேகிக்கப்படும் ஏழு நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அபேக்‌ஷா வைத்தியசாலைக்கு செல்லும் இ.போ.ச பேருந்து மீதே ஆன்டிகம பகுதியில் வைத்து இவ்வாறு கல்வீச்சு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் பத்துளுஓயா, கிரியங்கள்ளிய, பங்கதெனிய மற்றும் வென்னப்புவ ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 25 வயதுக்கும் 30 வயதுக்கும் இடைப்பட்டவர்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

புற்றுநோயினால் பாதிக்கப்பட்ட மக்களின் நலன் கருதி இ.போ.சபையின் சிலாபம் சாலைக்கு சொந்தமான குறித்த பேருந்து சில வருடங்களுக்கு முன்பிருந்து புத்தளம் -ஆனமடுவ நகரில் இருந்து மஹரகம அபேக்‌ஷா வைத்தியசாலை வரை தொடர்ச்சியாக சேவையை மேற்கொண்டு வருகின்றது.

சம்பவம் தொடர்பில் தனியார் பேருந்து சாரதி மற்றும் நடத்துனர் உட்பட ஏழு பேர் ஆனமடுவ காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Share:

Related Articles