NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

பேஸ்புக் நிறுவனத்திற்கு இலங்கை நீதிமன்றத்தினால் பிறப்பிக்கப்பட்டுள்ள உத்தரவு!

இணையதளத்தை பயன்படுத்தி பௌத்த மதத்தையும், கௌதம புத்தரையும் இழிவுபடுத்தும் வகையில் பதிவுகளை இட்ட முகநூல் கணக்குகள் பற்றிய தகவல்களை வழங்குமாறு பேஸ்புக் நிறுவனத்திற்கு இலங்கை நீதிமன்றம் உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது.

குற்ற விசாரணை திணைக்களத்தின் கணனி குற்ற விசாரணை பிரிவு அதிகாரிகள் விடுத்த கோரிக்கைக்கு அமைய இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இணையதளத்தை பயன்படுத்தி பௌத்த மதத்திற்கும், கௌதம புத்தருக்கும் இழிவு ஏற்படுத்தும் வகையிலான பதிவுகள் இடப்பட்டு வருவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இது தொடர்பில் குற்ற விசாரணை பிரிவினர் விரிவான விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக நீதிமன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விசாரணைகள் தொடர்பிலான அறிக்கையை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு நீதவான்இ குற்ற விசாரணை பிரிவிற்கு அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்.

Share:

Related Articles