NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

பொதுச் சேவை ஓய்வூதிய விநியோகத் திட்டத்தின் பலன்களில் 20 சதவீதம் செல்வந்தர்களால் அனுபவிக்கப்படுகிறது!

இலங்கையின் கொள்கை ஆய்வுகள் நிறுவகம் அண்மையில் நடத்திய ஆய்வில், இலங்கையின் பொதுச் சேவை ஓய்வூதிய விநியோகத் திட்டத்தின் பலன்களில் 50 சதவீதமானது சனத்தொகையில் 20 சதவீதம் செல்வந்தர்களால் அனுபவிக்கப்பட்டமை தெரியவந்துள்ளது.

மக்கள் தொகையில் எந்தப் பகுதியினர் அதிக வரிச்சுமையை சுமக்கிறார்கள் மற்றும் அரசின் நலத் திட்டங்களால் யார் அதிக பயனடைகிறார்கள் என்பவற்றை குறித்த ஆய்வுகள் நிறுவகத்தின் கருத்துக்கணிப்புகளின் மூலம் தெரிய வந்துள்ளது.

நேரடி மற்றும் மறைமுக வரிகள் மற்றும் ஓய்வூதியங்கள், மானியங்கள் போன்ற முக்கிய நலத் திட்டங்களுக்கான அரசின் செலவினங்களை ஆய்வு செய்வதற்காக 2019ஆம் ஆண்டு வீட்டு வருமான ஆய்வு மற்றும் 2022ஆம் ஆண்டு தொழிலாளர் படை கணக்கெடுப்பு தரவுகளைப் பயன்படுத்தி பகுப்பாய்வு நடத்தப்பட்டது.

அரசாங்கத்தின் தொடர்ச்சியான செலவினங்களில் 8 சதவீதத்தை கொண்டுள்ள பொதுச்சேவை ஓய்வூதியங்கள், பணக்கார குடும்பங்களுக்கு சாதகமாக உள்ளன. 44 சதவீத ஓய்வூதியம் பெறுபவர்களில் 20 சதவீதமானோர் செல்வந்தர்களாக உள்ளனர். 11 சதவீதம் மட்டுமே கீழ் மட்டத்திலுள்ள 40 சதவீதத்தினரை நோக்கி செல்கிறது என ஆய்வு அறிக்கை கூறுகிறது. மேலும் 2023ஆம் ஆண்டில் இலங்கையில் ஓய்வூதியச் செலவு 20.5 சதவீதத்தால் அதிகரித்துள்ளதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது.

Share:

Related Articles