NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

பொதுத் தேர்தலுடன் தொடர்புடைய 537 முறைப்பாடுகள் பதிவு..!

2024 ஆம் ஆண்டுக்கான பாராளுமன்றத் தேர்தலுடன் தொடர்புடைய குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் இதுவரையில் 537 முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாகத் தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

அதன்படி, தேர்தல் விதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டில் 520 முறைப்பாடுகளும், 2 வன்முறைச் சம்பவங்களும், ஏனைய குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் 15 முறைப்பாடுகளும் கிடைக்கப் பெற்றுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

தேசிய தேர்தல் முறைப்பாட்டு முகாமைத்துவ நிலையத்திற்கு 180 முறைப்பாடுகளும், மாவட்ட தேர்தல் முறைப்பாட்டு முகாமைத்துவ நிலையத்திற்கு 337 முறைப்பாடுகளும் கிடைக்கப்பெற்றுள்ளன.

Share:

Related Articles