எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தல் கண்காணிப்பு நடவடிக்கைகளில் 50 வெளிநாட்டு கண்காணிப்பாளர்கள் ஈடுபடவுள்ளனர் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
அதன்படி, ஐரோப்பிய ஒன்றியத்தின் தேர்தல் கண்காணிப்பாளர்கள் ஏற்கனவே இலங்கைக்கு வருகை தந்துள்ளனர் என ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
அத்துடன், ஆசிய தேர்தல் கண்காணிப்பு வலையமைப்பின் கண்காணிப்பாளர்களும் எதிர்வரும் நாட்களில் வருகைதரவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, தேர்தல் ஆணைக்குழுவின் அழைப்பிற்கிணங்க மேலும் 8 நாடுகளின் தேர்தல் கண்காணிப்பாளர்களும் வருகை தரவுள்ளனர் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல் ரத்நாயக்க குறிப்பிட்டுள்ளார்.
சார்க் வலய நாடுகள் மற்றும் ரஷ்யாவை பிரதிநிதித்துவப்படுத்தி அவர்கள் இலங்கைக்கு வருகை தரவுள்ளமை குறிப்பிடத்தக்கது.