NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

பொதுமக்களின் உதவியை நாடும் பெற்றோர்!

கஹவத்தை – ஓபாத்த பகுதியைச் சேர்ந்த 13 வயதான சிறுவன் ஒருவர் கடந்த 2023-03-13 ஆம் திகதி முதல் 6 மாத காலமாக காணாமல் போயுள்ளதாக அவரது பெற்றோர் தெரிவிக்கின்றனர்.

ஓபாத்த இலக்கம் ஒன்று தமிழ் வித்தியாலயத்தில் கல்வி பயின்ற 13 வயதான நாகராஜ் திஷோர்காந்த் என்ற சிறுவனே இவ்வாறு காணாமல் போயுள்ளார்.

காணாமல் போன சிறுவன் இதுவரை வீடு திரும்பவில்லை என பெற்றோர் தெரிவிக்கின்றனர்.

சிறுவன் ஏற்கனவே ஒரு தடவை காணாமல் போன நிலையில், யாழ்ப்பாணத்திலிருந்து கண்டுபிடிக்கப்பட்டதாகவும் பெற்றோர் கூறுகிறனர்.

இந்த நிலையில், சிறுவன் மீண்டும் காணாமல் போயுள்ளமை குறித்து கஹவத்தை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

சிறுவன் தொடர்பான தகவல்கள் தெரியும் பட்சத்தில், 076 3718398 என்ற இலக்கத்திற்கு அறிய தருமாறு பெற்றோர் கேட்டுக்கொள்கின்றனர்.

Share:

Related Articles