பொதுவெளியில் பெண்கள் மீது அநாகரிகமாக நடந்துகொள்பவர்கள் உடன் கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படுவார்கள் என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் தெரிவித்துள்ளார்.
அதேவேளை, பஸ்களில் பயணிக்கும் பெண்களின் சுதந்திரம் உறுதிப்படுத்தப்படும்.
அத்துடன் பெண்களிடம் அநாகரிகமாக நடந்து கொள்ளல், தகாத வார்த்தைகளைப் பயன்படுத்தல் போன்ற செயற்பாடுகளுக்கு முடிவு கட்டப்படும்.
இதற்கென தற்போது புலனாய்வாளர்கள் களமிறக்கப்பட்டுள்ளதாகவும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் தெரிவித்தார்.
அதேவேளை பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் தொடர்பாக முறைப்பாடு செய்ய தனியான தொலைபேசி எண் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
109 என்ற தொலைபேசி இலக்கமே அறிமுகம் செய்யப்பட்டுள்ளது என்றும் பொதுப் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் தெரிவித்துள்ளார்.