நிலவும் சீரற்ற வானிலை காரணமாக, பொலன்னறுவை – சோமாவதி வீதி வெள்ளத்தில் மூழ்கியுள்ளது.
இதனால் குறித்த வீதியுடனான போக்குவரத்து முற்றாகத் தடைப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும், மாத்தளை மற்றும் நுவரெலியா ஆகிய மாவட்டங்களில் இன்று 75 மில்லிமீற்றர் அளவில் மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.