NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

பொலிஸாரினால் கைது செய்யப்பட்ட இளைஞன் சித்திரவதைக்குள்ளான நிலையில் மரணம்!

வட்டுக்கோட்டை பொலிஸாரினால் கைது செய்யப்பட்ட சந்தேக நபர் கடுமையாக அடித்து துன்புறுத்தப்பட்டதால் சிறுநீரகம் பாதிப்புக்குள்ளாகி உயிரிழந்துள்ளார் என்று சட்ட மருத்துவ அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

மேலும், குறித்த உயிரிழப்பானது இயற்கையானது இல்லையென கூறப்பட்டதோடு, உடற்கூற்று மாதிரிகள் மேலதிக பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

உயிரிழந்தவரின் சடலம் இன்று(20) நண்பகல் உடற்கூறு பரிசோதனைக்காக உள்படுத்தப்பட்ட நிலையிலே இந்த அறிக்கையிடப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணத்தில், விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நிலையில் பொலிஸாரின் சித்திரவதையால் உயிரிழந்ததாக தெரிவிக்கப்படும் இளைஞர் ஒருவரின் காணொளி தற்போது சமூக வலைத்தளங்களில் அதிகமாக பகிரப்பட்டு வருகின்றது. 

குறித்த, இளைஞன் உயிரிழக்கும் முன்னர் வைத்தியசாலையில் வைத்து தனக்கு சிறைச்சாலையில் நேர்ந்த கொடூரங்கள்  தொடர்பில் காணொளி ஒன்றின் ஊடாக வெளிப்படுத்தியுள்ளார். 

இதேவேளை, குறித்த சம்பவம் தொடர்பில் வட்டுக்கோட்டை பொலிஸார் இருவருக்கு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. 

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், யாழ்ப்பாணம் – மல்லாகம் நீதவான் நீதிமன்றின் உத்தரவில் விளக்கமறியலில் வைக்கப்பட்ட சித்தன்கேணி பகுதியை சேர்ந்த இளைஞன் யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வந்த நிலையில்  ஞாயிற்றுக்கிழமை (19) உயிரிழந்துள்ளார்.

Share:

Related Articles