NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

பொலிஸார் துரத்திச் சென்றதால் நபர் விபத்தில் சிக்கி உயிரிழப்பு!

பலாலி பொலிஸார் துரத்திச் சென்றதால் நபர் ஒருவர் விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 

இதன்போது சங்கானை வீதி, அச்சுவேலி பகுதியைச் சேர்ந்த 41 வயதுடைய ஒருவரே நேற்று இரவு இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,

குறித்த நபர் மோட்டார் சைக்கிளில் வீதியில் பயணித்துக் கொண்டிருந்த போது பலாலி பொலிஸார் வழிமறித்தனர். இந்நிலையில் அவர் மோட்டார் சைக்கிளை நிறுத்தாததால் அவரை துரத்திச் சென்றனர். இதன்போது அவர் வேகமாகச் சென்றதால் பலாலி ஆயர்கடவை பிள்ளையார் ஆலயத்துக்கு அருகே மின்கம்பத்துடன் மோதி விபத்துக்கு உள்ளாகினார்.

 இந்நிலையில் பொலிசார் அவரை, 1990 இலக்க அவசர நோயாளர் காவு வண்டி மூலம் தெல்லிப்பழை வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்தனர். இருப்பினும் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

குறித்த விபத்து இடம்பெற்ற பகுதி சுன்னாகம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதி என தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில் பொலிசாருக்கும் அங்கிருந்த பொது மக்களுக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இந்நிலையில் குறித்த பகுதியில் பதற்றம் நிலவியது. இதனை தடுப்பதற்கு அங்கு பொலிஸ் விசேட அதிரடிப் படையினர் களமிறக்கப்பட்டுள்ளனர்.

Share:

Related Articles