NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

பொலிஸ்மா அதிபரின் சேவைக்காலம் மேலும் 3 மாதங்களுக்கு நீடிப்பு…!

பொலிஸ் மா அதிபர் சி.டி.விக்ரமரத்னவுக்கு மேலும் 3 மாதங்களுக்கு சேவை நீடிப்பு வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

எனவே, நாளை அல்லது திங்கட்கிழமை அவர் பணியில்இணைவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

சி.டி.விக்ரமரத்ன 2020 ஆம் ஆண்டு நவம்பர் 27 ஆம் திகதி பொலிஸ் மா அதிபராக கடமைகளைப் பொறுப்பேற்றார்.

இந்நிலையில், கடந்த மார்ச் மாதம் 26 ஆம் திகதி அவர் ஓய்வு பெற இருந்த நிலையில், ஜனாதிபதியினால் அவருக்கு மூன்று மாத சேவை நீடிப்பு வழங்கப்பட்டது.

அந்தக காலம் கடந்த ஜூன் மாதம் 25 ஆம் திகதியுடன் நிறைவடைந்த நிலையில் அவருக்கு மேலும் 3 மாதங்கள் சேவை நீடிப்பு வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, அடுத்த 48 மணித்தியாலங்களுக்குள் புதிய பொலிஸ்மா அதிபரை நியமிப்பதற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நடவடிக்கை எடுப்பார் என பிரதமர் தினேஷ் குணவர்தன நேற்று பாராளுமன்றத்தில் கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Share:

Related Articles